மாரி தொடரிலிருந்து விலகும் நாயகி ஆஷிகா!

மாரி தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை ஆஷிகா அத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 நடிகை ஆஷிகா கோபால்
நடிகை ஆஷிகா கோபால் படம் | இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

மாரி தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை ஆஷிகா அத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2022 ஜூலை முதல் மாரி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆஷிகா கோபால் படுகோனே நாயகியாகவும் ஆதர்ஷ் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மூடநம்பிக்கைகளை மையப்படுத்தி அமானுஷ்ய காட்சிகள் கொண்ட திரைக்கதையுடன் மாரி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக 800 எபிஸோடுகளைக் கடந்து மாரி தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில், இத்தொடரில் இருந்து விலகுவதாக நடிகை ஆஷிகா அறிவித்துள்ளார்

இது தொடர்பாக ஆஷிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அற்புதமான 3 ஆண்டுகள் மற்றும் 800+ எபிஸோடுகளுக்குப் பிறகு மாரி தொடரில் என்னுடைய பயணம் முடிவுக்கு வருகிறது.

இந்தப் பயணத்தில் அளவில்லாத அன்பு கொடுத்து எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஜீ தமிழ் வாயிலாக தமிழக மக்களோடு தொடர்புகொண்டிருந்தது ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். இது என்றும் நினைவுகூரத்தக்கது.

அனைத்துக்கும் மிக்க நன்றி. என்னுடைய புதிய வாய்ப்புகளுக்கும் உங்கள் அன்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அன்புடன் ஆஷிகா கோபால் படுகோனே என்னும் மாரி எனப் பதிவிட்டுள்ளார்.

மாரி தொடரிலிருந்து விலகும் முடிவுக்கு ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனினும் சிலர், இத்தொடர் நீண்ட நாள்களாக ஒளிபரப்பாகி வருவதால், விரைவில் முடிப்பதே நல்ல முடிவு என எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சின்ன திரை நடிகரை மணந்த லப்பர் பந்து பட நடிகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com