சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

காந்தாரா - 2 படப்பிடிப்புக்கு எதிர்ப்பு?

காந்தாரா - 2 படப்பிடிப்பு குறித்து...

Published On :21 ஜனவரி 2025, 3:25 pm IST

காந்தாரா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக இப்படத்தைக் கொண்டு வர ரிஷப் ஷெட்டி திட்டமிட்டுள்ளதால் பான் இந்திய வெளியீடாக திரைக்கு வருகிறது.

தற்போது, கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஹெரூர் என்கிற கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது வெடி பொருள்களை அதிகமாக பயன்படுத்தியதால் வன விலங்குகளுக்கு தொல்லை ஏற்பட்டதாகக் கூறி கிராம மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கிராமவாசி ஒருவர் காயமடைந்ததால் எசலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், காந்தாரா - 2 படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்படலாம் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.