நான் பயிற்சி பெற்ற நடிகர் அல்ல: கார்த்தி

கல்விச் சிந்தனை அரங்கில் நடிகர் கார்த்தி பேசியது பற்றி...
நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி Express
Published on
Updated on
1 min read

தான் பயிற்சி பெற்ற நடிகர் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை (ஜன. 27) காலை தொடங்கியது.

இந்த நிகழ்வில் கொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது:

“மெய்யழகன் கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லாதது என்று சிலர் கூறுகின்றனர். மெய்யழகன் போன்ற சிலரை நிஜ வாழ்க்கையில் சந்தித்துள்ளேன்.

பருத்திவீரன் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர எனக்கு 3 மாதங்கள் தேவைப்பட்டது. பருத்திவீரன் படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் 16 வயதினிலே படம் பார்த்தேன். பேன்ட் அணிவதை நிறுத்திவிட்டு லுங்கிக்கு மாறினேன். நான் பயிற்சி பெற்ற நடிகர் இல்லை. நான் நிறைய கண்ணீர் சிந்தினேன்.

பட வாய்ப்புகளுக்காக என் தந்தை ஒருநாளும் என்னை பரிந்துரை செய்ததில்லை. படிப்பை முடித்து வேலைக்குச் செல்லவே அறிவுறுத்தினார். ஏனெனில், அவர் தந்தை இல்லாமல் வளர்ந்தவர். அதனால் நடிப்புத் துறையில் தான் சந்தித்த சவால்களை மகன்கள் சந்திக்க வேண்டாம் என நினைத்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தை கண்டு எனது தாய் உற்சாகம் அடைந்தார். அந்த பாத்திரத்தில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரை போன்று நடிக்க வேண்டும். ஆனால், என் நடிப்பில் இந்த கால நபரைப் போன்ற பிரதிபலிப்புகள் இருந்தன. அதனால் வந்தியதேவனாக நடிப்பதற்கு சில சங்க காலப் புத்தகங்களை படித்தேன். அது எனக்கு உதவியது.

கைதி 2 படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கவுள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com