இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.
இப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க: மோகன்லாலுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்!
இப்படம் பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து ஜன.12-ல் வெளியாகி உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மத கஜ ராஜாவின் வெற்றியால் இயக்குநர் சுந்தர். சி நடிகர் விஷாலை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் இதனை பென்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத கஜ ராஜா, ஆக்ஷன், ஆம்பள படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷால் - சுந்தர். சி கூட்டணி இணையவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் அதர்வா?

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?

விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிக்கமாட்டேன்: சுந்தர். சி
ஹெச். வினோத் இயக்கத்தில் சூர்யா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

