நடிகர் மோகன்லாலின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார்.
இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், விஸ்மயாவின் முதல் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு, ‘துடக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மோகன்லால் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.
நடிகையாவதற்கு முன்பே விஸ்மயா, “க்ரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (grains of stardust)" என்கிற கவிதை நூலை வெளியிட்டு கவிஞரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தம்பி அறிமுகமாகும் படத்தில் நடித்த விஷ்ணு விஷால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மோகன்லால் மகள் திரைப்படத்தின் புதிய போஸ்டர்!
ரூ. 200 கோடியை நெருங்கும் மோகன்லாலின் திரிஷ்யம் - 3!

மீண்டும் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால்!

மோகன்லால் மகள் படத்தின் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


