
மோகன்லால் மகள் படத்தின் வெளியீட்டுத் தேதி!
மோகன்லாலின் மகள் நாயகியாக நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...

துடக்கம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / மோகன்லால்.
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நடிகையாக அறிமுகமாகியுள்ள துடக்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், விஸ்மயாவின் முதல் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் உலகம் முழுவதும் ஆக.7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
#Thudakkam
— Mohanlal (@Mohanlal) May 12, 2026
Worldwide Release | AUGUST 7, 2026#JudeAnthanyJoseph #VismayaMohanlal @antonypbvr @aashirvadcine #AashishJoeAntony pic.twitter.com/olBuLmVEZT
Summary
Mohanlals Daughter's Vismaya Thudakkam Film: Release Date!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






