சிவகார்த்திகேயன் ப்ரொடெக்ஷன்ஸ் வழங்கும், நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிப்பில் உருவான புதிய படம் “ஹவுஸ் மேட்ஸ்”. நகைச்சுவைக் கலந்த ஹாரர் திரைப்படமான, இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டைம் டிராவல் குறித்த கதையை மையமாகக் கொண்ட படம் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழுவினர், இது ஒரு ஃபாண்டெசி ஹாரர் காமெடி படம் எனத் தெரிவித்துள்ளனர்.
எஸ். விஜயபிரகாஷ் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.
இந்நிலையில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சிவகார்த்திகேயன் ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The release date of the film ‘House Mates’, presented by Sivakarthikeyan Productions and starring actors Darshan and Kaali Venkat, has been announced.
இதையும் படிக்க: கதாநாயகனாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்! நாயகி இவரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகார்த்திகேயனின் சேயோன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் மாதவனின் ஜிடிஎன் வெளியீட்டுத் தேதி!
கட்டா குஸ்தி - 2 வெளியீட்டுத் தேதி!
அர்ஜுனின் ப்ளாஸ்ட் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



