ஒரே நாளில் வெளியாகும் பிரபாஸ், ரன்வீர் சிங் படங்கள்!

ஒரே நாளில் வெளியாகும் பிரபாஸ், ரன்வீர் சிங் படங்கள் குறித்து...
ஒரே நாளில் வெளியாகும் பிரபாஸ், ரன்வீர் சிங் படங்கள்!
Published on
Updated on
1 min read

பிரபாஸின் ராஜாசாப், ரன்வீர் சிங்கின் துரந்தர் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடையாத காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. , இப்படம் வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்ய தார் இயக்கியுள்ள துரந்தர் திரைப்படமும் டிச. 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகுவதால், எந்தப் படம் வசூலில் முந்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Summary

With Prabhas' Rajasaab and Ranveer Singh's Duranthar set to release on the same day, expectations among fans have increased.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com