காதலிப்பதை உறுதிசெய்த விஜய் தேவரகொண்டா... பெயரைக் குறிப்பிடாதது ஏன்?

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் காதல் வாழ்க்கை குறித்து...
Vijay Deverakonda
விஜய் தேவரகொண்டாபடம்: எக்ஸ் / விஜய் தேவரகொண்டா
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய் தேவரகொண்டா தான் காதலில் இருப்பதை உறுதிசெய்துள்ளார். மேலும். சில ஆண்டுகளாக தனது குடும்பம், காதல் மீது கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.

தற்போது, ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நடிகை ரஷ்மிகா மந்தனாவுடன் காதலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காதலிப்பது உண்மைதான்... ஆனால்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது:

கடந்த இரண்டாண்டுகளில் நான் மிகவும் பக்குவம் அடைந்திருக்கிறேன். வாழ்வது என்பதற்கான உண்மையான அர்தத்தை கற்றுக்கொண்டேன். உறவுகள் எல்லாவற்றையும் விட முக்கியமானது என அறிந்துகொண்டேன்.

கடந்த சில ஆண்டுகளாக என் அம்மா, அப்பா, காதலி அல்லது நண்பர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை.

இனிமேலும் இந்த குற்ற உணர்வுடன் இருக்க முடையாது என திடீரென ஒருநாள் தோன்றியது. அப்போதிலிருந்து நானாகவே வேண்டுமென்றே என் உறவினர்களுடன் அதிகமாக நேரம் செலவிடுகிறேன் என்றார்.

இதுவரை, விஜய் தேவரகொண்டா நேரடியாக ரஷ்மிகாவின் பெயரை எங்குமே சொல்லவில்லை. ஆனால், தான் காதலில் இருப்பதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருவரும் இணைந்து சுற்றுலா செல்வது, விமான நிலையங்களில் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி வைரலாகும்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட பதிவில் ரஷ்மிகா ஹார்டின்களை கமெண்ட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கிங்டம் திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் டிரைலர் இன்று மாலை திருப்பதியில் வெளியாகவிருக்கிறது.

Summary

Actor Vijay Deverakonda has confirmed that he is in love. He also said that he has been focusing on his family and love for a few years now.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com