
நடிகை நித்யா மெனன் தான் நடித்த 19 (1) ஏ என்ற மலையாள திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
பெண் இயக்குநர் இந்து வி.எஸ். இயக்கத்தில் கடந்த 2022-இல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியானது.
இந்தப் படத்தில் நித்யாவுடன் விஜய் சேதுபதி நடித்திருப்பார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இருவரும் இணைந்து நடித்த தலைவன் தலைவி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் 19 (1) ஏ என்ற படம் குறித்து நித்யா மெனன் கூறியதாவது:
19 (1) ஏ படம் மூன்றாண்டுகள் ஆகின்றன. அத்தி மரத்துக்குக் கீழே இருக்கும் குளுமையை இந்தப் படம் உணர்த்துகிறது. இந்தமாதிரியான இடத்தில்தான் உறங்க வேண்டுமெனத் தோன்றும். ஏனெனில் அது மிகவும் அமைதியாக இருக்கும்.
இந்தப் படத்தில் அதே மாதிரியான ஒரு மரமும் எங்களைச் சுற்றி வலுவான கதாபாத்திரமாக இருக்கும்.
இப்படியாக அமைந்தது ஒரு அதிர்ஷ்டம் அல்லது சிறந்த ஆசிர்வாதமாக இருக்கலாம். எப்போதும் இந்தமாதிரியான படங்களைச் செய்ய வேண்டுமென்பதற்காக இருக்கலாம்.
அதே நடிகர்கள், ஆனால் அப்படியே வித்தியாசமான படம். பரந்துபட்ட, வித்தியாசமான கருத்துகள், இந்த மாதிரியான தொனி கொண்ட படங்களில் நடிப்பது பிடிக்கும்.
அனைத்து திசைகளிலும் சுதந்திரமாக, காத்திரமாக இதே மாதிரி நிறைய படங்களில் நடிக்க வேண்டுமென நினைக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.