சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

விக்ரம் சுகுமாரனை இறுதிவரை வாட்டிய ஆதங்கம்!

மதயானைக்கூட்டம் படத்திற்குக் கிடைத்த விமர்சனங்கள் குறித்து விக்ரம் சுகுமாரன்...

இயக்குநர் விக்ரம் சுகுமாரன்

Published On :

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் உயிரிழந்தது திரைத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். ஆடுகளம் படத்தில் மதுரை வட்டார மொழி பயிற்றுநராகவும் படத்தின் உருவாக்கத்திலும் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார்.

ஆடுகளம் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரன் பெரிய காரணம் என பல பேட்டிகளில் வெற்றிமாறன் கூறியிருப்பார்.

தொடர்ந்து, மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமானார். அப்படம், இன்றும் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால், வெளியானபோது வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது. அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் ஷாந்தனுவை வைத்து இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அப்படமும் பெரிதாகக் கவனம் பெறவில்லை.

இந்த நிலையில், தன் அடுத்த படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூற மதுரை சென்றவர் மாரடைப்பால் உயிரிழந்தது சக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

விக்ரம் சுகுமாரன் அறியப்பட்ட இயக்குநராக இருந்தாலும் தன் மீது தொடர்ந்து சாதிய முத்திரை குத்தப்படுவதாக வேதனைப்பட்டு வந்தார். காரணம், மதயானைக்கூட்டம் திரைப்படம் தென்மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சாதியினரின் பழக்க, வழக்கங்கள்; சீர்செய்தல் முறையுடன் ஆண்களின் ஆதிக்கத்தைப் பதிவுசெய்திருந்தது.

ஆனால், அப்படத்தை வசனங்கள் மூலம் சுயசாதி விமர்சனங்களை முன்வைக்கும் படமாகவே உருவாகியிருந்தார். இருப்பினும், மதயானைக்கூட்டத்தில் விக்ரம் சுகுமாரன் தன் சொந்த சாதியின் பெருமையைத்தான் பதிவுசெய்திருக்கிறார் என பல விமர்சனங்கள் வந்ததால் அது அவரைக் காயப்படுத்தியிருக்கிறது.

வெளிப்படையாகவே, இதுகுறித்து தன் வேதனையைப் பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார். தனக்குக் கொடுத்த அடையாளத்தை உடைக்க வேண்டும் என்பதற்காகவே ராணவ கோட்டம் படத்தை இயக்கினார். ஆனால், அப்படத்தின் தோல்வி ஏமாற்றமாக அமைந்துவிட்டது. மீண்டும் சமூக பிரச்னையைக் கையிலெடுத்து நல்ல திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருந்த நேரத்தில் அவரின் திடீர் மறைவு திரை விமர்சகர்களிடமும் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.