தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அஜ்மல் மீது பாலியல் குற்றச்சாட்டு!

நடிகை ஒருவர் அஜ்மல் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறியுள்ளார்.

News image
Updated On :9 ஜூன் 2025, 4:13 pm IST

பிரபல நடிகர் அஜ்மல் மீது நடிகையொருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகர் அஜ்மல் ‘அஞ்சாதே' படத்தின் மூலம் தன் நல்ல நடிப்பால் ரசிகர்களிடம் கவனம்பெற்றவர். தொடர்ந்து, கோ, வெற்றிச்செல்வன், நெற்றிக்கண் உள்பட 50 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக, நடிகர் விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இந்த நிலையில், சினம்கொள், உயிர்வரை இனித்தாய் படங்களின் நாயகி நர்வினி டெரி ரவிசங்கர் நேரலை விடியோவில், திரைத்துறையில் பெண்களை உடல் ரீதியாகச் சுரண்டுபவர்கள் குறித்து பேசினார்.

அதில், “நான் நண்பருடன் மாலுக்கு சென்றபோது அங்கு நடிகர் அஜ்மலைச் சந்தித்தேன். என்னைப் பார்த்தவர், நான் நாயகனாக நடிக்கும் படத்திற்கு நாயகி தேடிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் ஆடிஷனுக்கு வருகிறீர்களா? எனக் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டு அடுத்த நாள் அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கு, அவருடன் நடனமாட அழைத்தார். நான் மறுப்பு தெரிவித்தேன். இருந்தும் விடாபிடியாக என்னைத்தொட்டு முத்தமிட முயற்சித்தார்.

அதற்கு, அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அமைதியானார். அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டேன். இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால், அன்றிரவு டென்மார்க் செல்ல வேண்டியிருந்ததால் பேச முடியவில்லை. பின், என் நண்பரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் அஜ்மலை நேரில் அழைத்து கண்டித்தார். அப்போதே, காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நான் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் மீதான நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.