தக் லைஃப் படத்தில் இடம்பெறாத முத்த மழை பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியானது.
படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் வணிக ரீதியாக இப்படம் கடுமையானத் தடுமாற்றத்தை அடைந்தது.
இதுவரை இப்படம் இந்தியளவில் ரூ. 50 கோடிக்கும் குறைவாகத்தான் வசூலித்திருக்கிறதாம். இது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சிவா ஆனந்த் எழுதிய முத்த மழை பாடல் சின்மயி குரலால் பெரும் கவனம் பெற்றது. ஆனால், படத்தில் விடியோ வடிவில் பாடல் பயன்படுத்தப்படவில்லை. இது ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இதையும் படிக்க: நம் நாட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுதான்: அட்லி
இந்த நிலையில், தமிழில் பாடகி தீ குரலில் த்ரிஷாவுக்கான முத்த மழை பாடலின் விடியோ வடிவத்தை இன்று வெளியிட்டுள்ளனர். அழகான காட்சிகளால் பாடல் கவனம் ஈர்க்கிறது.
ஆனால், தீ நல்ல பாடகிதான் என்றாலும் த்ரிஷாவின் தோற்றத்தில் அவர் குரல் சரியாகப் பொருந்தவில்லை என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் லாபம் ரூ. 805 கோடி!
எல்ஐகே புரோமோ தயார்!

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
டிமான்டி காலனி - 3 குரு சோமசுந்தரம் அறிமுக விடியோ!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

