ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிரபாஸ் படத்தில் 3 நாயகிகள்: தி ராஜாசாப் டீசர் முன்னோட்டம்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் முன்னோட்ட டீசர் வெளியாகியுள்ளது.

News image

தி ராஜாசப் படத்தில் நாயகிகள். - படங்கள்: யூடியூப் / ஃபீபுள் மீடியா பேக்டரி

Updated On :15 ஜூன் 2025, 6:34 am

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகிய 3 நாயகிகள் இருப்பது டீசரின் முன்னோட்டத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.

சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. சமீபத்தில் வெளியான கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.

தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடையாத காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இப்படம் வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.