வடசென்னை யுனிவர்ஸில் சிம்பு - வெற்றி மாறன் படம்?

வெற்றி மாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்து...
SilambarasanTR - VetriMaaran film will be happening under VadaChennai Universe
வட சென்னை 2 போஸ்டரில் சிம்பு. படம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

வெற்றி மாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வட சென்னை யுனிவர்ஸில் இருக்குமென தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனராம். இதனால், இப்படம் வட சென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிகர் கவின் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வட சென்னை யுனிவர்சில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படுகிறது. ராஜன் வகையறாவில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது உண்மையாக இருந்தால் வடசென்னை - 2 படத்தில் சிம்பும் தனுஷும் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது.

சிம்பு இருக்கும் ரசிகர்கள் உருவாக்கிய வட சென்னை 2 போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SilambarasanTR - VetriMaaran film will be happening under VadaChennai Universe
ரசிகர்கள் உருவாக்கிய வட சென்னை 2 போஸ்டர்படம்: எக்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com