தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் ரூ.13 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக வெளியான தனுஷின் ராயன் படத்தினை விட குபேரா குறைவாக வசூலித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் முதல்நாளில் ரூ.15. 7 கோடி வசூலித்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள குபேரா திரைப்படம் தெலுங்கு இயக்குநர் இயக்கியதால் தெலுங்கில் மட்டும் நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் தனது மகன் லிங்காவுடன் முதல்நால் முதல்காட்சியை சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கில் கண்டுகளித்துள்ளார்.
ரசிகர்களின் ஆதரவில் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தன.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் உடன் நாகார்ஜுனா, ரஷ்மிகா நடிப்பில் குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று (ஜூன் 20) வெளியானது.
தணிக்கைச் சான்றிதழுக்குப் பிறகு 19 காட்சிகள் நீக்கப்பட்டன. சுமார் 13 நிமிஷம் 41 நொடிகள் நீங்கி கடைசியில் 3 மணிநேரம் 1 நிமிஷம் கொண்டதாக வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்னொருவரின் உரையிலிருந்து காப்பியடித்து பேசிய நடிகர் தனுஷ்?

தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!

நடிகர் தனுஷின் ஓம் திரைப்பட பாடல் அப்டேட்!

லியோவை முறியடிக்காத ஜன நாயகன்..! முதல் நாள் வசூல் எவ்வளவு?
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



