
நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, படத்தின் அதிகாரபூர்வ கிளிம்ஸ் விடியோவை கேபிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்..’ என விஜய்யின் குரலில் தொடங்கும் இந்த கிளிம்பஸ் விடியோவில் போராட்டக்களம் போன்ற பகுதியில் கையில் வாளுடன் காவல்துறை உடையில் விஜய் நடந்து வருகிறார்.
இந்த விடியோவில் முறுக்கு மீசை தோற்றத்தில் ‘மெர்சல்’ படத்தை நினைவுப்படுத்தும் கிளிம்ஸ் விடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்துடன் பொங்களன்று ஜன.9ஆம் தேதி வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
பலரும் இந்தப் படத்துக்கான போஸ்டர்களைப் பார்த்து இது எச்.வினோத் படமா அட்லி படமா எனக் கேட்டு வருகிறார்கள். நேர்மறையான நோக்கில்தான் ரசிகர்கள் கூறினாலும் ஏற்கனவே எடுத்த மாதிரி இருக்கக் கூடாதெனவும் எதிர்பார்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.