மயில்சாமி மகனுடன் நடிக்கும் நடிகை பாடினி குமார்!

புதிய வெப் தொடரில் மயில்சாமி மகனுடன் நடிக்கும் நடிகை பாடினி.
padine / yuvan
பாடினி குமார், யுவன் மயில்சாமிபடம்: இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

புதிய வெப் தொடரில் யுவன் மயில்சாமியுடன் நடிகை பாடினி குமார் நடிக்கிறார்.

மறைந்த புகழ் பெற்ற காமெடி நடிகரான மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி. இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான தணியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படத்தில் பிரதான வேடத்தில் யுவன் நடித்திருந்தார். பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டக்காரண்யம் என்ற படத்தில் யுவன் நடிக்கிறார்.

இதனிடையே, யுவன் மயில்சாமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் என்ற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இத்தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், விரைவில் தங்கமகள் தொடர் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் புதிய வெப் தொடரில் நடிகர் யுவன் மயில்சாமி நடிக்கிறார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடிக்கிறார்.

சின்ன திரையில் ஒளிபரப்பான நாயகி, திருமணம் தொடர்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் பாடினி குமார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் டேக் டைவெர்ஷன், சீசா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து, ஹார்ட் பீட் வெப் தொடரில் அனிதா பாத்திரத்தில் மருத்துவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் இவர் உருவாக்கினார்.

தற்போது ஹார்ட் பீட் வெப் தொடரின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து புதிய வெப் தொடரில் யுவன் மயில்சாமியுடன் பாடினி நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Actress Padini Kumar will star opposite Yuvan Mayilsamy in the new web series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com