Celebrities who participated in the Killer Pooja.
கில்லர் பூஜையில் பங்கேற்ற பிரபலங்கள். படங்கள்: இன்ஸ்டா / ப்ரீத்தி அஸ்ரானி.

பூஜையுடன் தொடங்கியது கில்லர் படப்பிடிப்பு! திரைப் பிரபலங்கள் பங்கேற்பு!

எஸ்.ஜே.சூர்யா இயக்கும் கில்லர் படத்தின் அப்டேட்...
Published on

எஸ்.ஜே.சூர்யா இயக்கும் கில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிகராக மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குராக களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக 2015-இல் இசை எனும் படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டீடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் தயாரிகிறது.

பான் இந்திய படமாக உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளார்கள்.

Summary

It has been announced that the shooting of the film Killer, directed by S.J. Surya, has begun with a pooja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com