முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு! ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

குஷ்பு தொடரில் இணையும் பெண் நடனக் கலைஞர்!

நடிகை குஷ்பு நாயகியாக நடித்துவரும் புதிய தொடரில் நடனக் கலைஞர் பானுமதி நடிக்கவுள்ளார்

குஷ்பு / பானுமதி - இன்ஸ்டாகிராம்

Updated On :

நடிகை குஷ்பு நாயகியாக நடித்துவரும் புதிய தொடரில் நடனக் கலைஞர் பானுமதி நடிக்கவுள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பு, சின்ன திரையில் பல்வேறு தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடித்த சின்ன சின்ன ஆசை, அர்த்தமுள்ள உறவுகள், மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி, நம்ப குடும்பம், ருத்ரா, பார்த்த ஞாபகம், லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் மிகவும் பிரபலமடைந்தவை.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஒளிபரப்பான நம்ம வீட்டு மகாலட்சுமி, நந்தினி ஆகிய இரு தொடர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவ்வாறு தொடர்ந்து நடித்துவரும் குஷ்பு, தனது கணவர் சுந்தர்.சி -யின் சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளதோடு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலில் நடுவராகவும் பங்கேற்றார்.

தற்போது மீண்டும் சின்ன திரை தொடரில் நடிக்கவுள்ளார். இவர் சரோஜினி எனப் பெயரிடப்பட்ட தொடரில் நாயகியாக நடித்துவருகிறார்.

டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடரின் படபிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

சரோஜினி தொடரில் நடிகை குஷ்புவுடன் சேர்ந்து நடனக் கலைஞர் பானுமதி நடிக்கவுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் நடித்துவருகிறார்.

அத்தொடரில் இவரின் நடிப்பு பலதரப்பில் பாராட்டப்பட்டதால், தற்போது குஷ்பு இவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலர் பானுமதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.