/

காளிதாஸ் 2: முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி!

நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 அப்டேட்..

News image
Updated On :7 மார்ச் 2025, 11:43 am IST

நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

தனது 50ஆவது படமாக மலையாளத்தில் வெளியான லவ் எனும் படத்தினை அதே பெயரில் ரீமேக் செய்து நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான இப்போதைக்கு காதல் ஆஹா தமிழில் வெளியானது.

2019இல் காளிதாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ செந்தில் இயக்கிய இந்தப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இதில் பவானி ஸ்ரீ, அபர்ணதி நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மார்ச்.8ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.