சர்தார் 2 படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது.
கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். பி.எஸ். மித்ரன் இயக்கிய இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சர்தார் 2 பட டப்பிங் பணிகள் பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது.
எனவே, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி!

அன்பே டயானா படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



