ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவுதேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! அபிஜித் தீப்கேஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

தனுஷ் 56 படப்பிடிப்பு! மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் தொடக்கம்!

தனுஷ் 56 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது பற்றி...

தனுஷ் 56 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Published On :

நடிகர் தனுஷின் 56-வது திரைப்பட படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது.

நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நவம்பர் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நடிகர் மம்மூட்டியும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே. சூரியா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் மிகப் பிரம்மாண்டமாக இன்று காலை தொடங்கியது.

இந்த பூஜையில் பங்கேற்ற நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கையாக வழங்கினார்.

மாரநாடு கருப்பணசாமி கோயிலில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான தனுஷின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.

Story image

மேலும், தனுஷின் ரசிகர்களுக்கு சுடச்சுடக் கறி விருந்தும் கருப்பணசாமி கோயிலில் தயாராகி வருகின்றது.

தனுஷ் 56 படத்துக்கு படையல் எனப் பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

'Dhanush 56' filming begins with a puja at the Maranadu Karuppanasamy Temple!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.