வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

அரசியல் கட்சி எப்போது? தனுஷ் கொடுத்த ரியாக்‌ஷன்!

அரசியல் கட்சி குறித்து கேள்விக்கு தனுஷ் ரியாக்‌ஷன்...

தனுஷ்

Published On :

நடிகர் தனுஷிடம் அரசியல் கட்சி எப்போது தொடங்க உள்ளீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது.

நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் தனுஷின் பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், வழக்கத்திற்கு மாறாக தலைவர் தனுஷ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், தனுஷ் அரசியலில் களமிறங்க காய் நகர்த்துவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் நிகழ்வில் பேசியது அமைந்தது.

மேலும், தனுஷ் கட்சித் தொடங்கவிருப்பதை உறுதிசெய்யும் விதமாக அவரது நற்பணி மன்றம் சார்பில் வெளியான அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த நிலையில், 72-வது தேசிய விருதுகள் நிகழ்வில் பங்கேற்று சென்னை திரும்பிய நடிகர் தனுஷிடம், “அரசியல் கட்சி எப்போது தொடங்குகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. இதனைக் கேட்ட தனுஷ், பலமாக சிரித்து பதில் சொல்லாமல் நகர்ந்துவிட்டார். இதனால், தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதால்தான் அக்கேள்விக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Actor Dhanush was asked when he would launch a political party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.