இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து விடியோவை கூலி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. இதில், குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
இப்படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று (மார்ச் 14) மாலை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு கூலி தயாரிப்பு நிறுவனம் பிறந்தாள் விடியோவை பகிர்ந்துள்ளது. சிறப்பாக எடிட் செய்யப்பட்ட அந்த விடியோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நவீன சினிமாவை மாற்றியமைத்தவர் என சன் பிக்சர்ஸ் லோகேஷ் கனகராஜை வாழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கூலி பவர்ஹவுஸ்!
இனி நேர்காணல்கள் கிடையாது! முடிவு எடுத்த லோகேஷ் கனகராஜ்?

கிண்டலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


