கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

82 வயதில் ரூ. 120 கோடி வருமான வரி செலுத்திய பிரபல நடிகர்!

அதிக வருமான வரி செலுத்திய நடிகர் குறித்து...

Published On :

இந்தியாவின் மிகப் பிரபலமான நடிகர் ரூ. 120 கோடி வருமான வரி செலுத்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சொந்தத் தொழில் செய்பவர்களைத் தவிர்த்து இந்தியாவில் தனிநபர் வருமான வரி செலுத்துவோர்களில் முன்னணி இடங்களைப் பிடிப்பது சினிமா மற்றும் விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில், இந்தாண்டு திரைத்துறையே ஆச்சரியப்படும் அளவிற்கு ரூ. 120 கோடி வரை வருமான வரியாக செலுத்தியுள்ளாராம் நடிகர் அமிதாப் பச்சன்.

2024 - 2025 ஆம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த நிதியாண்டில் மட்டும் அமிதாப் பச்சன் ரூ. 350 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இதில், ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற ரூ. 92 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும், கடந்தாண்டு வெளியான, ‘கல்கி ஏடி’ திரைப்படத்திலும் நல்ல சம்பளம் பெற்றிருக்கிறார்.

மேலும் பிற திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதால் இவ்வளவு பெரிய ஆண்டு வருமானத்தை சாத்தியப்படுத்தியுள்ளார் அமிதாப் பச்சன்.

ஆண்டுதோறும் அதிக வருமான வரி செலுத்தும் நடிகர்கள் பட்டியலில் நடிகர் ஷாருக்கானே (ரூ. 90 கோடி வரை) முதலிடம் பிடிப்பார். ஆனால், இந்த முறை நடிகர் அமிதாப் பச்சன் மிகப்பெரிய தொகையை வரியாக செலுத்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.