பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குட் பேட் அக்லி படத்தின் வில்லன் இவரா?

குட் பேட் அக்லி பட வில்லன் நடிகர் பற்றி...

News image

அஜித்குமார் / ரகுராம்

Updated On :19 மார்ச் 2025, 4:01 pm

DIN

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படத்தின் டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றதால் உறுதியாக இப்படம் ஹிட் அடிக்கும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முக்கியமாக, படத்தின் முதல் பாடலான ’ஓஜி சம்பவம்’ நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. குட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஹிந்தியிலும் இப்படத்தை அதிக திரைகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு வில்லனாக யார் நடிக்கின்றனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வருகின்றது.

இந்த நிலையில்தெலுங்கு நடிகர் ரகுராம், குட் பேட் அக்லியில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக ரகுராம் நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.