தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அமித் திரிவேதி இசையில் பேட் கேர்ள்: முதல் பாடல் ரிலீஸ் எப்போது?

பேட் கேர்ள் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பேட் கேர்ள் போஸ்டர். - படம்: எக்ஸ் / கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி

Published On :

பேட் கேர்ள் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியாகி சர்சையான, யூடியூப் தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது.

ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது.

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

ஒரு பெண்ணின் பள்ளி காதல் வாழ்க்கை, முதல் முத்தம், காதல், ஆசைகள், எதிர்பார்ப்புகளை வைத்து படம் நகர்வதாகத் தெரிகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் நாளை (மார்ச்.26) வெளியாகவிருக்கிறது.

பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.