

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எம்புரான் திரைப்படம் மார்ச்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக்கிய லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.
நடிகர் மோகன்லாலுடன் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமார் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
முன்பதிவிலேயே பல சாதனைகளை படைத்த எம்புரான் முதல்நாளில் இந்தியாவில் ரூ.21 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 48 மணி நேரத்துக்குள்ளாகவே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மோகன்லால் கூறியதாவது:
மலையாளம் சினிமாவில் 48 மணி நேரத்துக்குள்ளாகவே ரூ100 கோடி வசூலித்து புதிய அளவீடுகளை அசத்தியுள்ளது. இந்த வெற்றியில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது அன்பும் ஆதரவும்தான் இதைச் சாத்தியமாக்கியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.