தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார்!

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது புகாரளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

நடிகர் விஜய் தேவரகொண்டா - படம் | 2டி என்டர்டெயின்மென்ட்

Updated On :3 மே 2025, 6:28 am

திரைப்பட விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மீது தற்போது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. நடிகர் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படவிழா தெலங்கானா மாநிலம் ஹைதரபாதில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த விஜய் தேவரகொண்டா பேசியது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவ்விழாவில் பேசிய அவர், முகலாய மன்னர் ஔரங்கசீப் மற்றும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் ஆகியோரைக் கண்ணத்தில் அறைவேன் எனக் கூறியதுடன், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

அப்போது, அவர் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியின மக்களை பெஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டதாகவும், அவர்கள் அறிவின்றி சண்டையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கருத்துக்கு பல்வேறு பழங்குடியின அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து, அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பழங்குடியின மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி ஹைதரபாதின் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் லால் சவுஹான் எனும் வழக்கறிஞர் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “இந்த விவகாரம் பேச்சு சுதந்திரம் பற்றியது அல்ல, விளிம்புநிலை மக்களின் மரியாதை மற்றும் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் குறித்தது” எனக் கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும், நடிகர் விஜய் தேவரகொண்டா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.