கூலி திரைப்படத்தைப் பார்த்த அனிருத் அதுகுறித்துப் பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்த் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது. தற்போது, அடுத்தக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற அனிருத்திடம், ‘நீங்கள் இசையமைக்கும் படங்கள் எப்படி இருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் எமோஜிகள் (emojis) மூலம் தெரிவிப்பீர்கள். அப்படி, கூலி திரைப்படத்திற்கு என்ன எமோஜி வைத்திருக்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது
அதற்கு அனிருத், “நான் இப்போது படம் குறித்து எமோஜிகள் இடுவதில்லை. கூலி திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். நெருப்பு மாதிரி இருக்கிறது. இங்கேயே தீ எமோஜியை பதிவுசெய்கிறேன்.” என்றார்.
கூலி திரைப்படம் நன்றாக இருப்பதாக அனிருத் சொன்னது ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.
இதையும் படிக்க: மரண மாஸ் ஓடிடி தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

கருப்பு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும்: சாய் அபயங்கர்

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
அன்று அனிருத் செய்த உதவி... கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

