நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள தேசிங்கு ராஜா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
யக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான 2013-ல் வெளியாகி வெற்றிபெற்ற தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இன்ஃபனிடி கிரியேஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் வெளியான ஓம்காளி ஜெய்காளி தொடரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










