திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

சூர்யா - வெங்கட் அட்லுரி படத்தின் பூஜை...

Published On :

நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் திரையரங்கம் மற்றும் ஓடிடி உள்பட இதர உரிமங்களுடன் ரூ. 235 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளது.

ரெட்ரோவை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அடுத்ததாக, நடிகர் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்கிறார்.

Story image

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷும் நாயகிகளாக மமிதா பைஜு, ரவீனா டாண்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.