பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சிவகார்த்திகேயன் செய்த செயல்... பைரி நாயகன் நெகிழ்ச்சி!

சிவகார்த்திகேயன் குறித்து பைரி நாயகன் பேசியுள்ளார்...

News image
Updated On :25 மே 2025, 5:28 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பைரி படத்தின் நாயகன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஜான் கிளாடி இயக்கத்தில் நடிகர் சையத் மஜித் நடிப்பில் உருவான திரைப்படம் பைரி. கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது.

முக்கியமாக, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் படத்தின் உருவாக்கம் பலரையும் கவர்ந்தது.

இந்த நிலையில், அண்மை காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டு வருவதைக் குறிப்பிட்டு, பைரி நாயகன் சையத் மஜீத் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சமூக வலைதளங்களில் சகோதரர் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நான் என் நண்பர் மூலம் பைரி படத்தை நடிகர் சிவகார்த்திகேயனிடம் கொண்டு சென்றோம். அப்படத்தைப் பார்த்தவர் எங்களை நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது, படத்தின் இயக்குநர் ஊரில் இல்லாததால் அவரால் சந்திக்க முடியவில்லை.

இதை அறிந்துகொண்டவர் இயக்குநரை நாளை வருச்சொல்லுங்கள் நான் சந்திக்க வேண்டும் என்றார். அடுத்தநாள் இயக்குநர் உள்பட படக்குழுவினர் அவரைச் சந்தித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். சகோதரர் சிவகார்த்திகேயன் எங்களைப்போல் வளரும் கலைஞர்களுக்கு பெரிய ஆதரவாக இருப்பவர். உங்கள் கிண்டல் கேலிகளால் அதை கெடுக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.