அப்துல் கலாமின் பயோபிக் குறித்து அப்படத்தின் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
மேலும், ’தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரின் படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், எதிர்பாராத விதமாக ஆதி புருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கும் ‘கலாம் - தி மிஷைல் மேன் ஆஃப் இந்தியா’ என்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஓவ் ராவத், “அப்துல் கலாமின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பது கலைச்சவால் கொண்டது. ஒரு கலாசாரா பொறுப்பு. கலாமின் வாழ்க்கை உலகளவிய இளைஞர்களுக்கும் குறிப்பாக தென்னிதிய இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது. அவருடைய வாழ்க்கை ஒரு பாடம். “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் ரேவதி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒடிசிக்குப் பின் 3 ஆண்டுகள் ஓய்வெடுக்கும் கிறிஸ்டோஃபர் நோலன்!

தனுஷ் கொடுத்த அப்டேட்! இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறாரா?

70 ஆண்டுகால நண்பனை இழந்துவிட்டேன்... இயக்குநர் சுந்தர்ராஜன் வருத்தம்!

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


