ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இசைஞானியின் ருத்ரதாண்டவம்! - டோரதி படத்துக்கு நடிகர் தனுஷ் பாராட்டு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார்...

dhanush praises dorothy

டோரதி படத்துக்கு நடிகர் தனுஷ் பாராட்டு...

Published On :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 10 ஆவது திரைப்படம் “டோரதி”. நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் இசையில், இந்தப் படம் 1990 காலத்தில் மதுரையில் நடைபெறும் கதைகளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் “கல்யாண விருந்து” உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

டோரதி திரைப்படம் நாளை (செப். 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் இந்தப் படத்தைப் பாராட்டி இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில்,

“டோரதி - கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ்.

இது துணிச்சலான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு படம். இதில் ஒவ்வொரு நடிகரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா அவர்களின் இசை உங்களை மிரளவைக்கும். இது அவரது ‘ருத்ரதாண்டவம்’ என்றே சொல்லலாம்.

நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில், என் அன்பு நண்பர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.

Summary

Actor Dhanush has praised director Karthik Subbaraj's film "Dorothy".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.