
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே-வில் விஜய் சேதுபதி? ரசிகர்கள் அதிர்ச்சி?
அவெஞ்சர்: டூம்ஸ்டே கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி குரல்கொடுப்பது குறித்து...
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே | விஜய் சேதுபதி
மார்வெல் ஸ்டூடியோஸின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் டூம்ஸ்டே கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுக்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அவெஞ்சர்: டூம்ஸ்டே, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் டாக்டர் டூம்ஸ்டே கதாபாத்திரத்தில் ராபர்ட் டோனி ஜூனியர் நடிக்கிறார். மேலும், முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா), கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் (தார்), டாம் ஹிட்டில்ஸ்டன் (லோகி), பால் ரூட் (ஆன்ட்மேன்), பெனடிக்ட் கம்பர்பேட்ச் (டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்), செபாஸ்டின் ஸ்டான் (பகி), ஆண்டனி மேக்கி (ஃபால்கன்), பால் பெட்டனி (விசன்) உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அவெஞ்சர்ஸ் படங்களில் ராபர்ட் டோனி ஜூனியர் நடித்திருந்த அயர்ன்மேன் கதாபாத்திரம், 2019-ல் வெளியான எண்ட்கேம் படத்தில் இறப்பதாக கதை அமைந்திருந்தது. அயர்ன்மேன் கதாபாத்திரம் உயிரிழந்ததால், இனிவரும் மார்வெல் படங்களில் அயர்ன்மேன் கதாபாத்திரம் இருக்காது என ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தில் அயர்ன்மேன் பாத்திரத்தில் நடித்த ராபர்ட் டோனி ஜூனியரே டாக்டர் டூம்ஸ்டே கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இருப்பினும், இந்தப் படத்தில் அயர்ன்மேன் பாத்திரம் இருக்காது.
இந்த நிலையில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ்ப் பதிப்பில் அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்திருந்த நடிகர் விஜய் சேதுபதியே, டூம்ஸ்டே கதாபாத்திரத்துக்கும் குரல் கொடுக்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
இதனிடையே, எண்ட்கேம் படத்துக்கு முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களில் டப்பிங் பணியாற்றிய குழுவே டூம்ஸ்டே படத்திலும் நியமிக்கப்பட வேண்டும் என மார்வெல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதி டப்பிங் பணியாற்றியிருந்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் தமிழ்ப் பதிப்பைவிட ஆங்கிலத்திலேயே படத்தை பார்த்து விடலாம் என்றும் கூறுகின்றனர்.
Please @Marvel_India dont do this to #TamilAudience again. We like you, @VijaySethuOffl, but we don't need your voice for Marvel characters. #marvel #voice https://t.co/6mp2zEpUTP
— Pradeeban Subbarayan (@VS_Pradeeban) September 24, 2026
Summary
Vijay Sethupathi has signed a contract with Marvel India to lend his voice to the character of Dr. Victor von Doom in Avengers: Doomsday: Sources
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







