நடிகர்கள் பார்த்திபன், வடிவேலு புதிய படத்தில் இணைய உள்ளனர்.
மாமன்னன் படத்திற்குப் பின் வடிவேலுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அண்மையில், கேங்கர்ஸ் படத்திலும் வடிவேலு ரசிக்கும்படியான நகைச்சுவைகளைச் செய்திருந்தார்.
அடுத்ததாக, ஃபஹத் ஃபாசிலுடன் அவர் நடித்த மாரீசன் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், வடிவேலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகர் பார்த்திபன், “நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர் . சந்தித்தோம். விரைவில் படம் வெளியாகும்!” எனத் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் - வடிவேலு இணைந்து நடித்த பாரதி கண்ணம்மா, காதல் கிறுக்கன், குண்டக்க மண்டக்க, வெற்றிக்கொடிகட்டு ஆகிய படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தற்போது, இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கைதி - 2 படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.