

நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகரும் நடன இயக்குநருமான பிரபு தேவா மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கின்றனர்.
1990-கள் முதல் இருவரும் ஒன்றாக நடித்து வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு “பேங் பேங்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர ராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் எஸ்.ஜே. சூர்யா இன்று (ஜன. 30) வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.