மாமன் படத்தில் நடிகர் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து நடிகர் சூரி மறக்க முடியாத, மகத்தான கற்றல் அனுபவம் எனக் கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறியிருக்கும் சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய இந்தப் படத்தில் சூரி , ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பாலா சரவணன் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து சூரி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
ரஜ்கிரண் சார் அவர்களின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும்.
மாமன் படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. ‘சிங்கம்’ என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை, அந்தப் பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அதை வாழ்ந்தார்.
அவரது ஆழமான உணர்ச்சி வெளிப்பாடுகள், குறிப்பாக விஜி மேடம் அவர்களுடன் பகிர்ந்த அழகான கேமிஸ்ட்ரி, அந்தக் கதையின் நட்பும் நேசமும் பூரணமாகத் திரையிலே பெருகச் செய்தது.
இந்திய சினிமாவின் வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள ரஜ்கிரண் சார் அவர்களுடன் ஒரு காட்சியில் மட்டுமல்ல, ஒரு முழு படத்தையே பகிர்ந்து நடிக்க முடிந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த ஆசீர்வாதம்.
தன்னம்பிக்கையும், எளிமையும் நிரம்பிய அந்த மனிதரிடம் இருந்து நேரிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பது, என் வாழ்க்கையில் என்றும் ஒளிரும் ஒரு பொன்னாலைப்போல் இருக்கும்.
நன்றியுடன்… நெஞ்சார்ந்த நன்றியோடு… இந்தப் பயணத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜாக்கூர் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா: சூரி, விமல் ஒயிலாட்டத்தில் அசத்தல்!
இணையத்தைக் கலக்கும் சூரியின் மண்டாடி!

அசத்தும் நடிகர் சூரியின் மண்டாடி முன்வெளியீட்டு வணிகம்!

நான் சீதையிடம் வேண்டிக்கொண்டது இதுதான்: நடிகை சாய் பல்லவி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



