கன்னட மொழி விவகாரத்தில் கமல் ஹாசனுக்கு நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன், தமிழ் மொழியிலிருந்து வந்ததுதான் கன்னடம் எனப் பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதனால், கர்நாடகத்தில் பல இடங்களில் தக் லைஃப் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்துப் பேசிய கமல் ஹாசன், “''பல மொழி வரலாற்று அறிஞர்கள் கூறியதைத்தான் நான் கூறினேன். தக் லைஃப் படத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகிறது. என் படத்தை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேசத் தகுதி இல்லை; ஏனெனில், இதில் அவர்களுக்குப் போதிய படிப்பினை இல்லை. அன்பு ஒருபோதும் மன்னிப்புக் கேட்காது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் கமல் ஹாசனுக்கு தன் ஆதரவைத் தெரிவித்ததுடன், “நடிகர் கமல் ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்துள்ளீர்கள்? சர்ச்சை எழும்போது மட்டும் குரல்கொடுக்காமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நடிகர் ராஜேஷ் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டாயம் பார்க்க வேண்டும்... ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டிய கமல் ஹாசன்!

சிஜேபி வெற்றிக்கு வித்தியாசமாக வாழ்த்திய கமல்..! ஆதரவும் கேலியுமாக வைரலான பதிவு!

நடிகர் சிவராஜ்குமாரின் 666 திரைப்படத்தின் டீசர்!

நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன்: நடிகர் சிவராஜ்குமார்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


