நடிகர் ஷாருக்கானுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகரான ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது, பதான் இயக்குநர் இயக்கத்தில் கிங் படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் இன்று 60 ஆவது வயதைக் கொண்டாடுகிறார்.
இதற்காக அவரின் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன், “கேமரா, வசீகரம், புத்திசாலித்தனத்துடன் கிரீடம் தேவையற்ற ராஜாவுக்கு அவரின் இதயத்தைப்போல பிரம்மாண்ட பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இது எதிர்காலத்திற்கு ஆபத்து: நிவேதா பெத்துராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.