பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இருவர் குறித்து...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறியுள்ளனர்.

கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று(நவ. 9) 35 நாள்களை எட்டியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த வாரங்களில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன் 15 பேரும், வைல்டு கார்டு மூலம் சென்ற திவ்யா கணேசன், ப்ரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ் ஆகிய 4 பேரும் மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

கடந்த வாரம் வைல்டு போட்டியாளர்களின் வருகையால், போட்டி கடுமையாகியுள்ளது. வைல்டு போட்டியாளர்கள் 4 பேரும், முன்னதாக நுழைந்த 15 பேரின் விளையாட்டை மாற்றியுள்ளனர்.

ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் வெளியேற்ற நினைக்கும் இரு நபர்களின் பெயர்களை போட்டியாளர்கள் பரிந்துரை செய்து, அதில் வாக்குகளின் அடிப்படையில் நாமினேஷன் செய்யப்பட்டவராக பிக் பாஸ் அறிவிப்பார்.

அந்தவகையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில், வினோத், பிரவீன், கமருதீன், ரம்யா, எஃப்ஜே, சபரி, வியானா, கெமி, விக்ரம், பார்வதி, துஷார், திவாகர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இந்த வாரம் இவர்களுக்கு மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்று துஷார், பிரவீன் ஆகிய இருவர் வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்று(நவ. 9) இரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும்.

Summary

Two people have been eliminated from Bigg Boss 9 this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com