காந்தாரா சேப்டர் - 1 படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.
பழங்குடியினருக்கும் மன்னருக்குமான நிலவுரிமை பிரச்னைகளைத் தொட்டு கதை உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. காட்சியமைப்புகளும் இசையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் காந்தாரா சேப்டர் 1 மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் மணிகண்டன், ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டப்பிங் கலைஞராகவும் பணியாற்றிய மணிகண்டன் பல நடிகர்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். தற்போது, பான் இந்தியளவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகும் காந்தாராவில் டப்பிங் செய்தது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: வாங்கடா... வெளியானது பவன் கல்யாணின் ஓஜி டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.