ரிஷப் ஷெட்டி கன்னட நடிகர்கள் மற்றும் பிரபலங்களை அன்பாலோ செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. 2012 ஆம் ஆண்டில் வெளியான துக்ளக் என்கிற கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ரிஷப் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதில், கருட கமன விருஷப வாகன திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, காந்தாரா என்கிற படத்தை எழுதி, இயக்கி, நடித்தார். ரூ. 15 கோடியில் உருவான அப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியளவில் ரிஷப் ஷெட்டியைப் பிரபலப்படுத்தியது.
பின், காந்தாரா சாப்டர் - 1 படத்தால் வணிக ரீதியாகவும் ரூ. 100 கோடி சம்பளம் பெறும் கதாநாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது, சத்ரபதி சிவாஜி, ஜெய் ஹனுமன் உள்ளிட்ட பான் இந்திய படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பிரபல கன்னட நடிகர்களான ருக்மணி வசந்த், ராஜ் பி ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் உள்பட இதுவரை பின்தொடர்ந்து வந்த அனைவரையும் ரிஷப் அன்பாலோ செய்துள்ளார்.
தற்போது, தன் மனைவி பிரகதி, ரிஷப் ஷெட்டி பிலிம்ஸ், ரிஷப் ஷெட்டி பவுண்டேஷன் ஆகிய 3 கணக்குகளை மட்டுமே ரிஷப் பின்தொடர்வது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, பிரபலங்களில் சிலர் ஆரம்பத்திலிருந்தே யாரையும் பின்தொடராமல் இருப்பார்கள். ஆனால், நல்ல நட்பில் இருந்தவர்களையும் இன்ஸ்டாவிலிருந்து ரிஷப் நீக்கியுள்ளார்.
Summary
actor rishab shetty unfollowed everyone in instagram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு, கன்னட மொழிகளில் வாக்கு சேகரிப்பு: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

அரசன் படப்பிடிப்பு துவங்குமா?

தோல்வியை நியாயப்படுத்துகிறார் டிரம்ப்! ஈரான் குற்றச்சாட்டு

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

