25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்: ஆண்ட்ரியா

செல்வராகவன் குறித்து ஆண்ட்ரியா...

andrea in ayirathil oruvan

ஆண்ட்ரியா - x

Published On :1 ஏப்ரல் 2026, 12:20 pm IST

நடிகை ஆண்ட்ரியா இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா நடிப்புடன் இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்க் கவனம் பெற்றது. பிசாசு - 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.

கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். சென்சார் பிரச்னைகளால் திரைக்கு வராமல் இருக்கிறது. தற்போது, வெற்றி மாறனின் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், “ஆயிரத்தில் ஒருவன் - 2 திரைப்படம் வருமா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ஆண்ட்ரியா, “அப்படம் வருமா என என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். அந்தப் படம் உருவாகட்டும். ஆனால், நான் அதில் நடிக்க மாட்டேன். காரணம், செல்வராகவனுடன் பணியாற்றுவது மிகவும் கடினம். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக 200 நாள்கள் படப்பிடிப்பு நடத்தினார். ஆனால், அப்படத்திற்கு பின் வந்த படங்களும் கதாபாத்திரங்களும் எனக்கு சுலபமாகவே இருந்தது.” எனக் கூறினார்.

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

actor andrea spokes about aayirathil oruvan 2 and selvaraghavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.