இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் ராஜன் வகையறா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வட சென்னை பின்னணியில் அதில் இடம்பெற்ற பல கதாபாத்திரங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே நேரம், ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இதில், வடசென்னையின் அமீர் கதாபாத்திரத்தின் இளவயது வாழ்க்கையில் நடிகர் கென் நடித்து வருகிறார்.
தற்போது, ரசிகர்கள் படப்பிடிப்பில் கென்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இளவயது அமீராக மீனவர் தோற்றத்தில் கென் உள்ளார். இது வட சென்னை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
வடசென்னை திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஆனால், அரசனுக்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜன் வகையறாவுக்கு யாரென அறிவிக்கப்படவில்லை.
Filming for Rajan Vagaiyara, directed by Vetrimaaran, is proceeding briskly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











