கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ரூ. 8 கோடி சம்பளம் கேட்கும் சாய் அபயங்கர்?

சம்பளத்தை உயர்த்திய சாய் அபயங்கர்...

sai abhayankkar

சாய் அபயங்கர்

Published On :22 ஏப்ரல் 2026, 11:15 am IST

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், கருப்பு திரைப்படம் மே வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

மேலும், தற்போது இயக்குநர் அட்லியின் ராக்கா, தனுஷின் டி55 இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.

சில நாள்களுக்கு முன் பவழ மல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.

இப்பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. திரையிசையிலும் ஆல்பம் பாடல்களிலும் சாய் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சாய் அபயங்கருக்கான இசை உரிமம் ரூ. 10 கோடி வரை விற்பனையாவதால் தன் சம்பளத்தை ரூ. 8 கோடி வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Reports indicate that music composer Sai Abhyankar has drastically hiked his remuneration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.