எல்ஐகே படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே.
முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு, உருவான இப்படம் கடந்த ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வசூல் ரீதியாக இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், படத்துக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்தப் படத்தில், அனிருத் இசையில் உருவான தீமா தீமா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், எல்ஐகே திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information regarding the OTT release of the film LIK has emerged.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










