விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து கவனம் பெற்ற நடிகை சங்கவி, பக்தித் தொடர் மூலம் மீண்டும் சின்ன திரையில் நுழைகிறார்.
நடிகர் அஜித்தின் அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சங்கவி, ரசிகன், நாட்டாமை, மன்னவா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
விஜய்யுடன் நடிகர் சங்கவி நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படம், இருவரின் திரையுலகப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இவர், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சின்ன திரையில் கோகுலத்தில் சீதை தொடர் மூலம் அறிமுகமான சங்கவி, காலபைரவன், தாய் வீடு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பாளையத்து அம்மன் என்ற தொடரின் மூலம் சங்கவி மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடரில், ஹரிபிரியாவுடன் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்தத் தொடரில் கமலேஷ், அனு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். பக்தித் தொடர்களுக்கு இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், பாளையத்து அம்மன் தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
மேலும், பாளையத்து அம்மன் தொடர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Actress Sangavi, who garnered attention by starring as the female lead alongside top actors such as Vijay and Ajith, is making a comeback to the small screen through a devotional series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அயலி தொடர் நாயகனை கரம் பிடித்த சியாமந்தா!

ஆடுகளம் தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

ஒரே தொடரில் 3 காதல் கதைகள்! வித்தியாசமான பாணியில் எடுக்கப்படும் புதிய சீரியல்!

இன்று முதல் சங்கவி - எதிர்நீச்சல் நடிகையின் பக்தித் தொடர்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




